Thursday, September 27, 2007

கிராமம் ரொம்ப முன்னேறி விட்டது.

சுமார் ஒரு வருடம் கழித்து நான் என்னுடைய சொந்த கிராமத்திற்கு மும்பையிலிருந்து சென்றேன். எல்லோரும் நலம் விசாரித்தார்கள். நானும் நலம் என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் எல்லோரும் சரி ராத்திரி பார்ப்போம் என்று கிளம்பி சென்று விட்டார்கள். நானும் ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். எல்லோரும் ஒரே சொல்லே சொல்லுகிறார்களே என்று .

இரவு 7 மணி இருக்கும் நான் என்னுடன் சேர்ந்து வந்திருக்கும் நண்பர்களிடம் பேசி கொண்டு இருக்கும் போது ஒவ்வொரு வராக வரத் தொடங்கி விட்டார்கள் என்ன விசயம் என்று கேட்டால் ஆளுக்கு ஒரு குவாட்டர் வேணும் என்று தான் சொல்கிறார்கள். எனக்கு ஒரே சங்கடம் ஆகிவிட்டது. நாம் நாள் கழித்து நம்முடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை பார்க்க ஊருக்குள் வந்தால் எனக்கு ஒரு குவாட்டர் வேணும் மட்டும் சொல்கிறார்கள். இவர்களை நாம் என்ன சொல்வது

அதுவும் அந்த ஊரில் ஏதாவது திருவிழா மட்டும் நடந்து விட்டால் போதும் சொல்லவே வேண்டாம் அந்த டாஸ்மாக் கடையில் 20 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகி விடுகிறது. என்ன சொல்ல இப்போ கிராமம் ரொம்ப முன்னேறி விட்டது என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது. அதே போல் எல்லா இளைஞர்களை நான் குறிப்பிட வில்லை என்னிடம் குவாட்டர் மட்டும் பார்ட்டி கேட்டது குறைந்தது 40 பேராக இருக்கும் அதுவும் நான் ஒரு வாரத்திற்கு தான் விடுமுறை எடுத்து விட்டு சென்றேன்

தமிழ்நாட்டில் எப்போதும் இந்த கிராமத்தில் இருந்து டாஸ்மாக் கடையை எடுப்பார்கள் அப்போது தான் இந்த கிராமம உறுப்படும் எனக்கு வெட்கமாக தான் இருக்கு என்னுடை கிராமத்தை பற்றி தப்பாக எழுதுவது என்ன செய்ய இப்போ எல்லா கிராம்தில் இந்த மாதிரி தானே நடக்கிறது. யாரும் இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்

சூப்பர் ஸ்டார் டிவி

என்ன இது சூப்பர் ஸ்டார் டிவி என்று தலைப்பு வைத்திருக்கிறேன் என்று பார்க்கிறார்களா, உண்மையிலேயே ரஜினி தனியாக ஒரு டிவி ஆரம்பிக்கப்போகிறார். நீண்டகாலமாக ஜெயா டிவியின் மற்றொரு சேனல் ஜெயா பிளஸ் இன்னும் சோதனை ஓட்டமாக தான் ஓடி கொண்டு இருக்கிறது. ஆனால் கலைஞர் தன்னுடைய டிவியை ஒரு மாதத்தில் ஒளிபரப்பி விட்டார்; இதனை பார்த்த ரஜினி மகள் சௌந்தர்யா தானும் ஒரு டிவி ஒளிபரப்ப வேண்டும் என்று அடம்பிடித்தார் போல் இருக்கு ரஜினி தன் மகள் சௌந்தர்யா பேச்சை என்னைக்கு தட்டியிருக்கிறார். ஏற்கனவே ரஜினியை வைத்து சுல்தான் என்ற அனிமேசன் படத்தை எடுத்து வருகிறார் அதே போல் இதற்கு ரஜினி ஓ கே சொல்லிவிட்டார். இதற்கு எந்த மாதிரி பேர் வைக்கிறது என்று யோசித்து அதுதான் சூப்பர் ஸ்டார் பேர் இருக்கே அதே பெயரை வைத்து விட்டார்கள் டிவி நிகழ்ச்சியை எப்படி தயாரிக்கிறது என்ன மாதிரி இருக்க வேண்டும் என்ற டிஸ்கசன் நடக்கிறது. தினமும் 1 மணி நேரம் மட்டும் டிவியில் தலைகாட்டினால் போதும் அதற்கு என்றே தனி நேயர்கள் கிடைத்துவிடுவார்கள்;. பின்ன என்ன பெயரை கேட்டாலே சும்மா அதிருதல்ல இனிமே அவர் டிவியிலும் வரும். அந்த நாளை எதிர்பார்கிறேன்.

Wednesday, September 26, 2007

இன்றைய சூப்பர் ஸ்டார்

இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கிறது என்று இந்திய தற்போதைய கேப்டன் தோனி கூறுகையில் இளம் வயதில் ஒரு சாதனை படைத்ததோடு இந்திய நாட்டிற்கு பெருமை தந்த வீரர் ஆக திகழ்கிறார். அவருக்கு எத்தனை பாராட்டு விழா வைத்தாலும் ஒரு தவறும் இல்லை. இன்று காலை 12 மணிக்கு ரசிகர்கள் அவர்களை மும்பை வான்கடே மைதானத்தில் பார்த்து பரசவப்படும் போதும் நானும் கண்டு ரசித்தேன். எத்தனை ஆயிரம் மக்கள் தான் இந்த வெற்றியை கொண்டாடுகிறார்கள். தோனி இப்போது கோடி அதிபதியாக இருப்பார். இந்த நல்ல நேரத்தில் இந்தியாவில் ஏழை மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன் அவருடைய ஜார்க்கண்ட் என்னும் மாநிலத்தில் இருக்கும் வறுமைக்கு கீழ் வாழும் மக்களுக்கு எதாவது நன்மை செய்தார் என்றால் நான் இன்னும் ஒரு படி மேல் அவரை வணஙகுவேன். ஏன் என்றால் நானும் தோணியின் ரசிகன்.