Thursday, October 9, 2008

மின்வெட்டு இது தமிழகத்தின் தாராக மந்திரம்

நேற்று தான் என்னுடைய அம்மா திருநெல்வேலிருந்து மும்பை வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் ஏன் இங்கு மின்வெட்டு ஆக மாட்டேங்கிறது என்று.

அதற்கு நான் சொன்னேன்.

1) இங்கு இலவச கேஸ் சிலிண்டர் கிடையாது.
2) 1 ரூபாய்க்கு அரிசி கிடையாது.
3) இலவச டிவி கிடையாது.
4) மளிகை சாமான்கள் ஏதுவும் ரேசன் கடையில் கிடையாது.
5) இலவச பட்டா கிடையாது.

ஆனால் இங்கு தமிழகத்தில் உள்ளது போல் உணவு பொருட்கள் சுலபமாக கிடைக்காது. இங்கு நடத்தர மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் உழைப்பை மட்டுமே நம்புகிறார்கள். அரசியல் வாதிகளை எதிர்பார்ப்பது கிடையாது என்றேன்.

மொழி தமிழ்

மொழி தமிழ் ஆனால் இந்த ஒரு மொழி வைத்து கொண்டு நாம் எதுவும் செய்துவிட முடியாது அதாவது மனிதனின் கற்பனைதிறனை இந்த மொழி தெரியவைத்துவிடும் ஆனால் நாட்டு நடப்பை தெரிவித்து விடுமா அதே போல் முழுக்க முழுக்க பிறமொழியை மட்டும் பயன்படுத்தாமல் நம் தமிழ்மொழியை வளர்ப்போம். கற்றது கையளவு ஆனால் கற்காதது உலகளவு ஆகவே தமிழ் மொழியும் உலகறிவுக்கு பிறமொழியையும் நாம் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது.

ரிக்கிபாண்டிங்கின் டெஸ்ட் சாதனை


இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிக்கிபாண்டிங் அபாரமாக சதம் அடித்தார். இது இந்தியாவிற்கு எதிரான முதல் சதமாகும். முதலாவதாக கைடன் ரன் ஏதும் எடுக்கமால் ஜாகீர்கான் பந்தில் அவுட் ஆனார். அதன் பின் ஆட வந்த ரிக்கிபாண்டிங் இந்தியாவின் எல்லா பவுலர்களின் பந்துக்களை எளிதில் எதிர்கொண்டார். இந்த சதம் இவருக்கு 36 வது சதமாகும். ரிக்கிபாண்டிங் தொடர்ந்து விளையாடிக்கொன்டிருக்கிறார்.

இந்தியாவுக்கு ஒரு சல்யூட்

இந்தியா ஒரு மிகப்பெரிய கண்டமாக இருக்கவேண்டும். நாளடவில் இலங்கை; நேபாளம்: பாகி~ஸ்தான்; பங்களாதே~ஸ்; பூடான்; எனப்பிரிந்து இப்போது எல்லைப்பிரச்சனையில் சங்கடப்படுகிறது. இதற்கு எல்லாம் யார் காரணம். கிறிஸ்துவ மதம் இஸ்ரேல் தோன்றியது என்றால் இங்கு இருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர்களா? முஸ்லிம் மதம் மெக்காவில் தோன்றிது என்றால் இங்கு இருக்கும் முஸ்லிம் எல்லோரும் மெக்காவைச் சார்ந்தவர்களா?. ஏன் இந்த பிரச்சனை இவர்கள் முதலில் எல்லோரும் வெளிநாட்டவர்கள் என்று அகதிகளாக இங்கு தஞ்சம் அடைந்தவர்கள் என்று தானே அர்த்தம். அதை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் முதலில் எப்படி இந்துக்களை கிறிஸ்துவர்களாக மாற்றினார்களோ அதை இப்போது வேகமாக நிறைவேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்கள் தேர்ந்து எடுக்கும் மாநில் இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியாகும். நீ ஒருவனுக்கு அதுவும் ஒரு உயிருக்கு ஒர் உதவி செய்ய ஆசைப்பட்டால் அதன் பிறதிபலன் எதிர்பார்க்காதே இந்த வார்த்தை எல்லா மதத்திலும் உள்ளது. ஆனால் இந்த வார்த்தைகளை பின்பற்றுவதில்லை இந்த கிறிஸ்துவர்கள். அடுத்தது முஸ்லிம் இவர்கள் ஒரு கொசுவை கூட கொல்ல கூடாது என்று குரானில் கூறியிருக்கிறது. ஆனால் இன்று வரை அதை கடைப்பிடித்தார்கள் அல்லது தவறு செய்தவர்களை இந்த முஸ்லிம் சமுதாயம் காட்டி கொடுத்து இருக்கிறது. அடைக்கலம் தானே கொடுக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் அப்பார்பட்டு இந்து கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் தோன்றியது பற்றி யாருமே நம்பவில்லை. ஆனால் கூர்ந்து கவனித்தால் அவர் எத்தனை நல்லவர்களை ஒவ்வொரு காலகட்டத்தில் உருவாக்கி இருக்கிறார் என்று தெரியும். மத்த மதத்தில் எத்தனை அவதாரம் கடவுள் எடுத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்போம். இந்த இந்து மதத்தில் மட்டுமே அந்த சிறப்பு இருக்கிறது. அதே போல் இந்தியா இந்து நாடாக தான் இருந்தது இந்த அரசியல் வாதிகள் தான் இது இந்து நாடாக இருக்கிறதை விட எல்லா மதத்திற்கு சலுகைகள் கொடுப்பபோம் என்று கூறினர் இந்த சலுகை 60 வருடங்களுக்கு முன்னால் நல்லா இருந்தது. இப்போது அந்த சலுகையினால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறது. மற்ற எந்த நாடும் இவ்வளவு சாதி; மதம்; பேதம் பார்க்காது நம் நாடு வேற்றுமையிலும் ஒற்றுமையாக திகழ்கிறது. இந்தியாவுக்கு ஒரு சல்யூட் இதில் யாரும் மனமும் சங்கடப்பட்டால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Friday, October 19, 2007

கோயில் என்பது என்ன?

இது எல்லோருக்கும் தெரியாது. ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான் அதுவே அவன் ஒரு கோயில் உள்ளே சென்ற பின் அவனுக்கு கடவுள் நம்பிக்கை வருவது இல்லையோ ஆனால் சாந்தமாக மாறி விடுகிறான். அதுவே ஒரு முடி நம்பிக்கையாக நான் நினைத்து விட முடியாது.

அதேபோல் மற்ற பூஜைகள் செய்கிறார்கள் அது நமக்கு முடி நம்பிக்கையாக தெரிகிறது. ஏன் இப்படி ஒரு கல்லுக்கு இவ்வளவு மரியாதை செய்து அதை வழிப்பாடுகிறார்கள் என்று எல்லோருக்கும் தோன்றுகிறது. நம்முடைய வீட்டில் நம் முன்னோர்கள் இறந்து விடுகின்றனர் நான் என்ன செய்கிறோம் அவர்களுக்கு பிடித்த பண்டங்கள் மற்றும் துணிகளை வாங்கி அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

இதுவே நாளடைவில் அது சாமியாக மாறிவிடுகிறது. இன்று நாட்டில் அமைதியான இடமாக எந்த இடத்தை சுட்டி காட்ட முடியும். சரி அதை விடுங்கள் ஒருவன் பிரபல ரவுடியாக இருக்கலாம் ஆனால் ஒரு கோர்ட் வளாகத்தில் கொலை செய்வான் தவிர கோயிலுக்குள் கடவுள் பக்தியுள்ள ரவுடி கொலை செய்வானா.

நாட்டில் ஏராளமாக போலி சாமியார்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்படி பட்டவர்கள் என்று உங்களுக்கு தெரியும் அதாவது கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவன் கடவுள் பெயரை சொல்லி எமாற்ற மாட்டான் ஏன் என்றால் கடவுள் தண்டணை கொடுக்கும் என்று அவனுடைய நம்பிக்கை அதுவே கடவுள் நம்பிக்கை இல்லாதவனே ஒரு போலி சாமியாக வலம் வர முடியும். எத்தனையோ பேர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்த்தவர்களாக மாறி இருக்கிறார்கள் இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை அதுவே கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்துவாக மாறி இருப்பவர்கள் யாரும் இருக்கிறார்கள். அதாவது கிறிஸ்தவ மதம் என்பது வெளிநாட்டினர் மதம் அவர்கள் இந்தியா வந்தார்கள் எல்லோரையும் பணம் கொடுத்து மதம் மாற சொன்னார்கள் அதே போல் அவர்களும் மாறி விட்டனர்.

இதில் விசேசம் என்னவென்றால் அவர்களின் பெயர்களை மாற்றி விடுகின்றனர் இது எவ்வளவு மதக் கொடுமை ஒருவன் பிறக்கும் போது ஒரு பெயர் வளரும் போது ஒரு பெயர் இவர்களை யாரையும் தடுத்து நிறுத்தியிருக்கிறார்களா? இந்த முட நம்பிக்கையாளர்கள். முடியாது ஏன் என்றால் அவர்கள் பணம் வைத்திருக்திருக்கிறார் அதன் மூலம் காரியத்தை சாதித்து விடுவார்கள். இடையில் மாட்டுவது இந்த இந்து தான்.

இடையில் ஜெயலலிதா மதமாற்ற சட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் அன்றைய எதிர் கட்சி திமுக அதை எதிர்த்தது. அதே போல் கோயில்களில் ஆடு பண்றிகளை பலியிடக் கூடாது என்று அறிவித்தது அதுவையும் மறைமுகமாக எதிர்த்தது.

Thursday, October 18, 2007

இந்தியா நம்பர் 1

1. கிரிக்கெட் மொத்தம் 12 நாடுகள் விளையாடுகிறது அதில் இந்தியா 6 வது இடம்.
2. ஹாக்கி மொத்தம் 10 நாட்டில் இந்தியா 8 வது இடம்
3. கால்பந்து 117 வது இடம்
4. ஒலிம்பிக்கில் 67 வது இடம் இவ்வளவும் விளையாட்டில் இந்தியா இருக்கும் நிலைமை.
உண்மையிலே நாம் இந்த விளையாட்டில் இந்தியா நம்பர் 1 இடத்திற்கு வர வேண்டும் என்று எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்போம் இதுவரை வந்திருக்குதா? ஆனால் சத்தமே இல்லாமல் நாம் முதலிடம் பிடித்திருக்கும் எதில் தெரியுமா உலக வங்கியில் கடன் வாங்கும் நாடுகளில் இந்தியா நம்பர் 1 என்ற முதலிடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும் .

1. அரசியல் வாதிகள் (குறிப்பிட்ட)
2. தொழிலதிபர்கள் (குறிப்பிட்ட)
3. விளையாட்டு வீரர்கள் (குறிப்பிட்ட)
4. சாதிபிரிவினர்கள்(குறிப்பிட்ட)
5. மதப்பிரிவினர்கள்(குறிப்பிட்ட)

உலக வங்கியிடம் ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல்வாதிகள் கடன்களை வாங்கி ஏழை மற்றும் சாலை நாட்டிற்கு இதர செலவுக்காக வாங்குகிறார்கள் பிறகு அதை உரிய முறையில் செலவு செய்யாமல் ஊழல் செய்கிறார்கள் அதில் அரசு அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. தொழிலதிபர்கள் ஒழுங்காக வரி கட்டாமல் இருக்கிறார்கள் இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள் இவர்கள் ஜெயிப்பார்களா இல்லது தோற்பார்களா என்று ஒரு கோஷ்டியே பெட் கட்டிக் கொண்டு இருக்கிறது. இவர்களால் நாட்டுக்கு ஒரு நல்லபெயர் இல்லாமல் கடைசியில் தோல்வியடைந்து நாட்டிற்கு துரோகம் செய்கின்றனர்

மதப்பிரினர்கள் தங்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும் என்று வாதாடுகின்றனர்.

சாதிப்பிரிவனர்கள் கலவரங்கள் மற்றும் தன்னுடைய சாதி மட்டும் சமுதாயத்தில் வளர வேண்டும் என்று எண்ணுகின்றனர. இதனால் இந்தியா இப்போது உலக வங்கியிடம் கடன் வாங்கி விட்டு நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. உலகவங்கியும் கடன்களை இந்தியாவிற்கு தாரளமாக வழங்குகிறது ஏனெனில் அப்பதான் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு வந்து கொள்ளை அடிக்க முடியும் அமெரிக்கா சொலற படி கேட்க வேண்டும். இதனால் பாதிப்பு அடைவது என்னவோ இந்திய மக்கள்தான். காலம் கடந்து போச்சு இதிலிருந்து மீள இன்னும் இந்தியாவிற்கு முடியுமா முடியாதா என்ற நிலை இருக்கிறது. இதற்கு கவலை படுவது யாருமில்லை.

மொத்தம் ரூ.15.662 கோடி கடன் வாங்கயிருக்கிறது. இதுவே ஒரு நாடு உலக வங்கியிடமிருந்து வாங்கும் அதிகபட்ச தொகையாகும்.

Tuesday, October 16, 2007

வருது வருது கலைஞரின் 2 புதிய சேனல்கள்

அட இப்பதான் கலைஞர் டிவி வந்தது அதுக்குள்ள இசையருவி, 24 தமிழ் செய்தி ஆகிய இரு புதிய டிவிகளையும் ஒளிபரப்புவதற்கு ஆயத்த மாகிறார்கள். இவர்களுக்கு மக்களின் மேல் என்ன பெரிய பாசம் இருந்ததிட போகிறது.

முதலில் முரசொலிமாறன் மகனின் பெயரில் டிவி ஆரம்பித்தவர்கள் பிறகு அதன் பங்குகளை வாங்கிவிட்டு இப்போது புது சேனல் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது அதற்குள் 2 புதிய சேனல்களை துவங்க இருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி செய்து வருவது நல்லது தான் என்று திமுக காரன் மட்டும் சொல்வான். ஏன் என்றால் அந்த காலத்திலேயே எம் ஜி ஆர் எதிர்த்தார். அதனால் திமுகவிலிருந்து விலகி தனியொரு கட்சி ஆரம்பித்து அதை வெற்றி பெறும் கட்சியாக பெயர் எடுக்க வைத்தவர் எம்ஜிஆர். அப்படி பட்டவரே வெறுத்து ஒதுக்கும் நிலையில் இருந்த கலைஞர் பின்னாளில் அதாவது எம்ஜிஆர் இல்லை என்றாலும். அதிமுக மட்டும் அவரை எதிர்த்தது. மற்றவர்கள் எல்லாம் கலைஞரை ஆதரித்தனர்.

ஏன் ஏதற்கு என்ற காரணம் மட்டும் மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதா மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கி விட்டு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்விகளை சன்டிவி மூலம் படம் பிடித்து காட்டியவர் இந்த கலைஞர் ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கலைஞர் நினைக்கிறார். திமுகவுக்காக ஒரு டிவி வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலைஞர் திமுக டிவி மூலமாக தான் பரவுகிறதா. ஏன் இப்போது ஆரம்பிக்க போகும் இசையருவி அவருடைய கட்சியை பலப்படுத்துமா?

ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு டிவி மட்டும் பார்க்க தெரியும் என்று நினைக்கிறார் போலும்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் வராது. அதனால் நாம் என்ன செய்தாலும் தமிழ் மக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறார்.

என்ன செய்வது நாம் இந்த பிளாக்கரில் மட்டும் தான் எழுத முடியும் வேறு என்ன செய்ய முடியும்

நான் நினைக்கிறேன். எவ்வளவு பேர் பிளாக்கர் ஏழுதுகிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஏது மக்களுக்கு தேவை இல்லை என்றதொரு கருத்தருங்கும் நடத்தி அதில் ஏது தேவைபடுகிறது அதை நிறைவேற்றிட பாடுபட வேண்டும். ஏன் என்றால் இந்த காலத்தில் அரசியல் வாதிகள் பின்னாளில் போவதை விட நம்மால் செய்ய முடியுமா?