Tuesday, October 16, 2007

வருது வருது கலைஞரின் 2 புதிய சேனல்கள்

அட இப்பதான் கலைஞர் டிவி வந்தது அதுக்குள்ள இசையருவி, 24 தமிழ் செய்தி ஆகிய இரு புதிய டிவிகளையும் ஒளிபரப்புவதற்கு ஆயத்த மாகிறார்கள். இவர்களுக்கு மக்களின் மேல் என்ன பெரிய பாசம் இருந்ததிட போகிறது.

முதலில் முரசொலிமாறன் மகனின் பெயரில் டிவி ஆரம்பித்தவர்கள் பிறகு அதன் பங்குகளை வாங்கிவிட்டு இப்போது புது சேனல் தொடங்கி ஒரு மாதம் ஆகிறது அதற்குள் 2 புதிய சேனல்களை துவங்க இருக்கிறார்கள்.

இவர்கள் இப்படி செய்து வருவது நல்லது தான் என்று திமுக காரன் மட்டும் சொல்வான். ஏன் என்றால் அந்த காலத்திலேயே எம் ஜி ஆர் எதிர்த்தார். அதனால் திமுகவிலிருந்து விலகி தனியொரு கட்சி ஆரம்பித்து அதை வெற்றி பெறும் கட்சியாக பெயர் எடுக்க வைத்தவர் எம்ஜிஆர். அப்படி பட்டவரே வெறுத்து ஒதுக்கும் நிலையில் இருந்த கலைஞர் பின்னாளில் அதாவது எம்ஜிஆர் இல்லை என்றாலும். அதிமுக மட்டும் அவரை எதிர்த்தது. மற்றவர்கள் எல்லாம் கலைஞரை ஆதரித்தனர்.

ஏன் ஏதற்கு என்ற காரணம் மட்டும் மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதா மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கி விட்டு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்விகளை சன்டிவி மூலம் படம் பிடித்து காட்டியவர் இந்த கலைஞர் ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கலைஞர் நினைக்கிறார். திமுகவுக்காக ஒரு டிவி வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலைஞர் திமுக டிவி மூலமாக தான் பரவுகிறதா. ஏன் இப்போது ஆரம்பிக்க போகும் இசையருவி அவருடைய கட்சியை பலப்படுத்துமா?

ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு டிவி மட்டும் பார்க்க தெரியும் என்று நினைக்கிறார் போலும்.

விரைவில் சட்டமன்ற தேர்தல் வராது. அதனால் நாம் என்ன செய்தாலும் தமிழ் மக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறார்.

என்ன செய்வது நாம் இந்த பிளாக்கரில் மட்டும் தான் எழுத முடியும் வேறு என்ன செய்ய முடியும்

நான் நினைக்கிறேன். எவ்வளவு பேர் பிளாக்கர் ஏழுதுகிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி ஏது மக்களுக்கு தேவை இல்லை என்றதொரு கருத்தருங்கும் நடத்தி அதில் ஏது தேவைபடுகிறது அதை நிறைவேற்றிட பாடுபட வேண்டும். ஏன் என்றால் இந்த காலத்தில் அரசியல் வாதிகள் பின்னாளில் போவதை விட நம்மால் செய்ய முடியுமா?

No comments: