Thursday, October 18, 2007

இந்தியா நம்பர் 1

1. கிரிக்கெட் மொத்தம் 12 நாடுகள் விளையாடுகிறது அதில் இந்தியா 6 வது இடம்.
2. ஹாக்கி மொத்தம் 10 நாட்டில் இந்தியா 8 வது இடம்
3. கால்பந்து 117 வது இடம்
4. ஒலிம்பிக்கில் 67 வது இடம் இவ்வளவும் விளையாட்டில் இந்தியா இருக்கும் நிலைமை.
உண்மையிலே நாம் இந்த விளையாட்டில் இந்தியா நம்பர் 1 இடத்திற்கு வர வேண்டும் என்று எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்போம் இதுவரை வந்திருக்குதா? ஆனால் சத்தமே இல்லாமல் நாம் முதலிடம் பிடித்திருக்கும் எதில் தெரியுமா உலக வங்கியில் கடன் வாங்கும் நாடுகளில் இந்தியா நம்பர் 1 என்ற முதலிடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும் .

1. அரசியல் வாதிகள் (குறிப்பிட்ட)
2. தொழிலதிபர்கள் (குறிப்பிட்ட)
3. விளையாட்டு வீரர்கள் (குறிப்பிட்ட)
4. சாதிபிரிவினர்கள்(குறிப்பிட்ட)
5. மதப்பிரிவினர்கள்(குறிப்பிட்ட)

உலக வங்கியிடம் ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல்வாதிகள் கடன்களை வாங்கி ஏழை மற்றும் சாலை நாட்டிற்கு இதர செலவுக்காக வாங்குகிறார்கள் பிறகு அதை உரிய முறையில் செலவு செய்யாமல் ஊழல் செய்கிறார்கள் அதில் அரசு அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. தொழிலதிபர்கள் ஒழுங்காக வரி கட்டாமல் இருக்கிறார்கள் இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது.

விளையாட்டு வீரர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள் இவர்கள் ஜெயிப்பார்களா இல்லது தோற்பார்களா என்று ஒரு கோஷ்டியே பெட் கட்டிக் கொண்டு இருக்கிறது. இவர்களால் நாட்டுக்கு ஒரு நல்லபெயர் இல்லாமல் கடைசியில் தோல்வியடைந்து நாட்டிற்கு துரோகம் செய்கின்றனர்

மதப்பிரினர்கள் தங்களுக்கு தான் இடஒதுக்கீடு வேண்டும் என்று வாதாடுகின்றனர்.

சாதிப்பிரிவனர்கள் கலவரங்கள் மற்றும் தன்னுடைய சாதி மட்டும் சமுதாயத்தில் வளர வேண்டும் என்று எண்ணுகின்றனர. இதனால் இந்தியா இப்போது உலக வங்கியிடம் கடன் வாங்கி விட்டு நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது. உலகவங்கியும் கடன்களை இந்தியாவிற்கு தாரளமாக வழங்குகிறது ஏனெனில் அப்பதான் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவிற்கு வந்து கொள்ளை அடிக்க முடியும் அமெரிக்கா சொலற படி கேட்க வேண்டும். இதனால் பாதிப்பு அடைவது என்னவோ இந்திய மக்கள்தான். காலம் கடந்து போச்சு இதிலிருந்து மீள இன்னும் இந்தியாவிற்கு முடியுமா முடியாதா என்ற நிலை இருக்கிறது. இதற்கு கவலை படுவது யாருமில்லை.

மொத்தம் ரூ.15.662 கோடி கடன் வாங்கயிருக்கிறது. இதுவே ஒரு நாடு உலக வங்கியிடமிருந்து வாங்கும் அதிகபட்ச தொகையாகும்.

No comments: