Friday, October 5, 2007

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றுவேன். என்று அடம் பிடிக்கும் காரணம்.

1) தனக்கு பிறகு தன்னுடைய மகனை அரியணையில் அமர வைக்கும் ஆசையில் இருக்கும் கருணாநிதியின் தந்திரம்

2) ஏராளமான அரசாங்க ஊழியர்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ஏராளமான பணம் செலவழிக்கப்படும் அதில் அரசாங்க ஊழியர்களுக்கு எப்படி கமிஸன் கிடைக்கும்.

3) கர்நாடகம் - காவேரி, ஆந்திரம் -பாலாறு, கேரளா - பெரியாறு. ஆகிய நதிப் பிரச்சனைகளில் இல்லாத ஆர்வம் இந்த சேது சமுத்திர திட்டத்திற்கு மட்டும் இவ்வளவு அக்கறை காட்டுவது என்ன வென்றால். இதற்கு அடிக்கல் நட்டியது பிஜேபி. அப்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருந்தது. ஆக இந்த இரு கட்சி ஆரம்பித்த ஒரு செயல் தானே அதை நாம் முடித்து வைத்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் வரும் என்று நப்பாசை தான்.

4) ஏற்கனவே நான் சொன்ன மாதிரி தன் மகனை அரியணையில் ஏற முடிவு எடுத்திருக்கும் கலைஞர் அந்த தருணம் இதுதான் என்ற மாதிரி தமிழர்களின் எத்தனை பேர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் அவர்கள் மதிக்கும் தெய்வமான ராமரைப் பற்றி இழிவாக பேசினால் அதன் மூலம் ஒன்னு தேர்தல் இரண்டாவது கலைஞர் என்னால் முடியவில்லை வயதாகிவிட்டது நான் என்னுடைய பெரியார் வழியில் பயணிக்கப் போகிறேன்.எனக்கு இந்த பதவி ஒரு தடங்கலாக இருக்கிறது என்ற தந்திரம் இருக்கலாம்.

5. மக்கள் தொகை பெருகி வரும் நாடுகளில் ஒன்றான நாம் சூற்று சுழலையும் ஆராயவேண்டும். பழைய காலத்தில் அரசியல் வாதிகள் தாங்களாகவே ஒரு திட்டம் போட்டு அதன் அழிவுகளை பற்றி கூறாமல் நன்மைகளை மட்டும் கூறி திட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால்....... இந்த கால கட்டத்தில் மிடியா + இண்டர்நெட் செய்தி என்று காலத்தில் இன்னும் அதன் நன்மைகளை மட்டும் கூறி ராமரை சண்டைக்கு இழுப்பது அவருடைய நாத்திகத்தின் மீது அவர் கொண்டு இருக்கும் அறியாமை காட்டுகிறது.

No comments: