Monday, October 1, 2007

மகாத்மா காந்தி இந்த பெயரை இன்றைய பிளாக்கரில் யாரும் எழுதவில்லை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவரால் புது தில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பகவத் கீதை, சமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒரு மகான் சுதந்திரத்தை நமக்கு பெற்று தந்திருக்கிறார். அவர் வழியில் போகாமல் ஏதோ தமிழகம் முழுவதும் பந்த என்று தான் மட்டும் கூறி கொண்டு அதை எல்லோரையும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்களை மட்டும் இன்று நிறைய பேர் பிளாக்கரில் நல்லவர்கள் வல்லவர்கள் என்று ஏழுதுகிறார்கள். ஏன் இவர்கள் மட்டும் இப்போது பிரிக்க வில்லையா நீ மதவாதக்காரன். நான் நாத்தீகன். இன்று மதவாதிகள் ஜெயித்துவிட்டார்கள். என்றாலாம் எழுதுகிறார்கள் அப்போ இவர்களும் ஒரு மத பிரியர்களா? அதாவது நாத்திகன் என்ற மதபிரியர்களா? என்று கேட்கிறேன்.

நமக்கு எத்தனை அருமையான காந்தியடிகள் கிடைத்தார் பிறகு அவரை பற்றி இன்றைக்கு யாராவது பிளாக்கரில் ஏழுதுகிறார்களா? இன்று பிளாக்கரில் இவ்வளவு சுதந்திரம் கிடைத்திருக்கது எல்லாமே காந்தியடிகளாரில் உறுதியான மனநிலைதான். இன்று எந்த தலைவருக்கு அந்த மன தைரியம் இருக்கிறது. சும்மா நாத்திகன் நாத்திகன் என்று எழுதினால் என்ன பயன். ஒருவனை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்று கூறினால் பைத்தியம் தீருமா நானும் ஒரு நாத்திகன் தான் ஆனால் யாருடைய மனதையும் புண் படுத்தாமல் தான் நானும் எல்லாருடையும் பழகுவேன். ஏன் என்றால் நாம் ஒருவனை இழிவான சொற்களால் பேசினால் அவனும் அப்படியே பேசுவான். அதுவே ஒரு நல்ல வார்த்தைகளால் அவனிடம் பேசினால் எப்படியும் அவனும் நல்ல வார்த்தைகளால் பேசுவான்.

இவருடைய பிறந்தநாள் அன்றாவது இவரைப் பற்றி வாழ்த்தி பெருமைகளாக பிளாக்கரில் எழுதுவார்கள் என்று நம்பிக்கையுடன் என்னுடைய உரையை முடித்து கொள்கிறேன்.

No comments: